இந்தியாவுடனான ராணுவ உறவு முக்கியம்: அமெரிக்கா

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
india, america, indian ocean, LAC, US defense secretary, us, இந்தியா, அமெரிக்கா, ராணுவ உறவு

வாஷிங்டன் : இந்தியாவுடனான ராணுவ உறவானது, தங்களுக்கு முக்கியமானது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மாஸ்க் டி எஸ்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவுடனான எங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இந்த உறவானது, 21ம் நூற்றாண்டில், அமெரிக்காவிற்கு முக்கியமானது. கடந்த நவம்பர் மாதம், இந்தியாவுடன் இணைந்து முதல்முறையாக கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டோம்.

இந்திய கடலில், இந்திய கடற்படையுடன், அமெரிக்க கடற்படை கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது, வலிமையான கடற்படை ஒத்துழைப்பிற்கு எங்களது உறுதித்தன்மையை எடுத்துகாட்டுகிறது. இந்தோ பசுபிக் பகுதி சுதந்திரமானது என்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.


latest tamil news



இந்தியா சீனா இடையில் நிலவும் சூழ்நிலை, எல்லை கட்டுப்பாட்டில் நடந்ததை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பதற்ற நிலையை குறைக்க வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X