பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு : இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து:

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Amarnath Yatra 2020 cancelled கொரோனா பாதிப்பு : இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து: amid COVID-19 pandemic, darshan likely to be broadcast through internet, TV

ஸ்ரீநகர்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தினமும் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மாளிகையில் அமர்நாத் ஆலய வாரிய கூட்டம் கவர்னர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டிருப்பதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இக்காலகட்டங்களில் யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியமானது. யாத்திரை பயணப்படும் பகுதிகளிலும் கொரோனா பரவ வாய்புள்ளைதை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. .

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஜூலை-202020:41:38 IST Report Abuse
Ramesh Sargam அட நீங்க வேற, இங்க தெருக்கோடியில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கே மார்ச் மாதத்தில் இருந்து போக முடியல. இதுல அமர்நாத் யாத்ரா எப்படி போக முடியும்?? மக்கள் ஹவுஸ் அர்ரெஸ்ட் என்றால், சுவாமி கோவில் அர்ரெஸ்ட்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202019:54:17 IST Report Abuse
Chandramoulli கொரோனா மூலம் மக்களுக்கு நல்ல செய்தி என்றால் இப்போது உட்கார்ந்த இடத்தில இருந்தே கடவுளை தரிசனம் செய்யலாம் . தள்ளுமுள்ளு இல்லாமல் பூரண மன அமைதியுடன் கடவுளை வணங்கலாம்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
21-ஜூலை-202021:52:13 IST Report Abuse
Visu Iyerவீட்டில் இருந்தே வழிபடுதல் என்றால் எதற்கு ஆன்லைன்.. வீட்டில் உள்ள படத்தை பார்த்தே வழிபடலாமே.. முதலில் வழிபடும் முறையை நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. பெயருக்கு ஹிந்து.. என்ற வெத்து கோஷத்தால் எந்த பயனும் இல்லை... என்பதை மக்கள் உணரும் வரை.. இப்படி தான் அவர்களும் இருப்பார்கள்.. கொரானா என்ற பெயரில் என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டு ம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X