பொது செய்தி

இந்தியா

ஆயுஷ் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பெங்களூரு : கர்நாடகாவில் தேசிய சுகாதார மிஷனின் கீழ் ஆயுஷ் மருத்துவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பாதிப்புகளை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செயல்படுத்தும்மாநில அரசு, தற்போது தேசிய சுகாதார மிஷன் ( NHM - National Health Mission ) கீழ் பணியாற்றும் ஆயுஷ் மருத்துவர்களின் சம்பளத்தை ஆறு மாதங்களுக்கு ரூ.25,000 முதல் 45,000 ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று மருத்துவ கல்விதுறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், ஆரம்ப சுகாதார மையத்தில் ( PHC - Primary Health Centres) பணியாற்றும் என்.எச்.எம் (NHM) மருத்துவர்களின் சம்பளம் உயர்த்தப்படும். பொதுவாக ஆயுஷ் மருத்துவர்களுக்கு (என்.எச்.எம் கீழ் பணியாற்றும்) 60 சதவீத ஊதியம் மத்திய அரசாலும், 40 சதவீத ஊதியம் மாநில அரசாலும் வழங்கப்படும். எவ்வாறாயினும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாநில அரசு முழு ஊதியத்தையும் வழங்கும். அதற்கு அடுத்ததாக மாநில அரசு ஊதியம் தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும். கொரோனா தொடர்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் சோதனை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.


latest tamil news



தொடர்ந்து, கர்நாடக ஆயுஷ் மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் டாக்டர் பி.எஸ் மதுகர் கூறியதாவது : அரசின் முடிவு தொடர்பாக முழுமையான தெளிவு கிடைக்கும் வரை அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடருவார்கள். இந்த சங்கத்திற்கு கர்நாடகாவில் 27,000 ஆயுஷ் பயிற்சியாளர்கள் ஆதரவு அளிக்கின்றனர். இந்திய ஆயுஷ் கூட்டமைப்பு கீழ், இன்று சுகாதாரஅமைச்சர் பி.ராமுலுவை சந்தித்த பின்னர் அவர்கள் வேலை நிறுத்தம் குறித்து முடிவு செய்வார்கள். ஊதியத்தை அதிகரிப்பதற்கான அரசின் முடிவு அனுமதிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பதவிகளுக்கு எதிராக பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்கள், ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் தேசிய சுகாதார மிஷனின் கீழ் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்தியா காரியக்ரம் மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பொருந்தும். ஊதிய உயர்வு தொடர்பான முழு தெளிவு கிடைத்த பிறகு தான் வேலை நிறுத்தத்தை விட முடிவு செய்வோம். இவ்வாறு கூறினார்.


latest tamil news



இந்திய ஆயுஷ் கூட்டமைப்பின் நிறுவனர் பொது செயலாளர் டாக்டர் மகாவீர் ஹவேரி, அவர்கள் அதிக ஊதியம் கோருகின்றனர். ஆயுஷ் மருத்துவர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) அல்லோபதி மருத்துவம் பயிற்சி செய்ய அனுமதிப்பதாகவும் கூறினார். இரண்டு கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என கூறினார். கர்நாடகாவில் நேற்று 3,648 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 67,420 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் புதிதாக 72 பேர் பலியாகினர். இதுவரை மொத்தமாக 1,403 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் தற்போது 42,216 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X