பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் டிக்டாக் தடை; கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
FaceBook, Mark Zuckerberg, TikTok, FB,India ban

புதுடில்லி: இந்தியா, டிக்டாக் 'ஆப்'பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.


latest tamil news



பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், தனது பயனாளர்களின் டேட்டாக்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேஸ்புக் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மார்க்குள் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், டிக்டாக் போல், பேஸ்புக் மீதும் இந்தியா தடை விதிக்கலாம் என ஊழியர்களிடம் மார்க் வருந்தியுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 'ஆப்'களை ராணுவ வீரர்கள் தங்கள் மொபைலிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
23-ஜூலை-202007:35:09 IST Report Abuse
Balaji பொது மானிட சீர்க்கேட்டிற்கு பொறுப்பேற்க வேண்டும். மனித வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிய கண்டுபிடிப்புகள்... இவரைக்குற்றம் சொல்வதற்கில்லை ஆனால் பொதுவான என் கருத்து இது. கலி முற்ற கலிபுருஷன் அனுப்பியவர்களில் ஒருவராக இவர் இருப்பார்...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஜூலை-202006:12:04 IST Report Abuse
 Muruga Vel இந்த மாதிரி வயிறெரிஞ்சு காலம் கழிக்கிறதுக்கு வாலன்டியரா சோதனைக்கு வர சொல்லுங்களேன் ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202000:02:01 IST Report Abuse
தல புராணம் முதலில் பேஸ்புக் அப்புறம் கூகுள், இந்த இருவரும் தான் உலகின் டிஜிட்டல் பாதுகாப்புக்கு முதல் இரண்டு அச்சுறுத்தல்கள்.. பேஸ்புக்கை தடை செய்தால் போதும். அரசியல் கட்சிகள் கூட பொய் சொல்ல தளம் கிடைக்காமல் சுருண்டு போவார்கள். மூன்றாவதாக தடை செய்யப்பட வேண்டியது டுவிட்டர் பொய்பிரச்சார மேடை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X