பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் கொரோனா: சமாஜ்வாதி எம்.பி. புது விளக்கம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

கொரோனா நோய் அல்ல, நாம் செய்த பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பர்க் புது விளக்கம் அளித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. பிரேசில் அதிபர் கொரோனா சாதாரண காய்ச்சல் போன்றது தான் என்றார். அமெரிக்க அதிபர் தற்போது மாஸ்க் அணிந்தாலும் கட்டாயப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது. டாக்டர்கள் மஞ்சள், பனை கற்கண்டு கலந்த பால், காய்கறி சூப், கல் உப்பு கலந்த சுடுநீர் தொண்டையில் படும் வகையில் வாயை கொப்பளிக்கவும் என அறிவுரை வழங்குகிறார்கள்.


latest tamil news



சமாஜ்வாதி கட்சி சார்பில் சம்பல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் கூறுகையில் ''கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்க வில்லை. அதாவது கொரோனா ஒரு நோய் அல்ல. ஆனால், நம்முடைய பாவத்திற்காக கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனாவை போக்குவதற்கான சிறந்த வழி, நாம் அனைவரும் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202013:47:18 IST Report Abuse
Yaro Oruvan கொரோனாவை போக்குவதற்கான சிறந்த வழி, நாம் அனைவரும் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றார்..... அடேய்.. அடடே. அடடடேய்.. மொத்தமா கும்பலா தப்லீக் செஞ்ச பிரார்த்தனைதாண்டா இந்தியாவுல இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க காரணம்.. வாயால ஏதாவது வந்துரும்.. ஓடிப்போயிரு
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202002:24:03 IST Report Abuse
Rajagopal உண்மைதான். மனிதர்கள் இந்த உலகத்தை நாசம் செய்து விட்டோம். நாம்தான் இந்த உலகை அழிக்க வந்த கிருமிகள். நம்மிடமிருந்து இந்த உலகைக் காப்பாற்றத்தான் இந்தக் கிருமி வந்துள்ளது போல இருக்கிறது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202001:42:27 IST Report Abuse
தல புராணம் பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் கொரோனாவா? ஹா ஹா ஹா .. கொரோனா வந்த பெறவு எல்லாக் கடவுளுமே பாவம், என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிக்குதுங்கோ..அதான் நிதர்சனம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X