ரயில் பாதை திட்டத்தில் இந்தியா விலக்கல்? ஈரான் மறுப்பு

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் சபாஹர் ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கல் என்ற செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளதுஈரான் நாட்டில் , ஆப்கான் எல்லையை ஒட்டி உள்ள சபாஹர் துறைமுகத்தில் இருந்து ஜாதேகன் வரையிலான ரயில்பாதையை அமைக்கும் பணியை கடந்த 2003ம் ஆண்டில் ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது.2016ம் ஆண்டில் பிரதமர் மோடி ஈரான் பயணத்திற்கு பின்னர் அவை
 ரயில் பாதை, திட்டம்,இந்தியா ,விலக்கல?,ஈரான், மறுப்பு

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் சபாஹர் ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கல் என்ற செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது

ஈரான் நாட்டில் , ஆப்கான் எல்லையை ஒட்டி உள்ள சபாஹர் துறைமுகத்தில் இருந்து ஜாதேகன் வரையிலான ரயில்பாதையை அமைக்கும் பணியை கடந்த 2003ம் ஆண்டில் ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது.2016ம் ஆண்டில் பிரதமர் மோடி ஈரான் பயணத்திற்கு பின்னர் அவை செயல்பாட்டிற்கு வந்தது.

ரயில்பாதை பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திட்டத்திற்கான நிதி உதவியை இந்தியா தாமதப்படுத்துவதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு தனது சொந்த நிதியின் மூலமாகவே திட்டத்தை முடிப்பது என முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.


latest tamil newsஇந்நிலையில் சபாஹர்-ஜாகேதன் ரயில்வேயில் தற்போதைய ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய ஈரானுக்கான இந்திய தூதர் கடாம் தர்மேந்திராவை அந்நாட்டின் சாலை மற்றும் ரயில்வே தலைவர் சயீத் ரசூலி அழைத்தார். மேலும் இத்திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்க வில்லை என மறுத்தார்.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா இந்தியா உதவி வரும் நாடுகளில் தன்னிச்சையாக நுழைந்து நிதி உதவி அளித்துவருவதால் அந்நாடுகள் இந்தியாவை விலக்க முடிவு செய்து வருகின்றன. முதலில் நேபாளத்தை இந்தியாவிற்கு எதிராக திருப்பிய சீனா தற்போது ஈரானையும் இந்தியாவிற்கு எதிராக செயல்பட தூண்டி விடப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்காக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அந்நாட்டுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ஈரான் 25 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு கச்சா எண்ணெயை விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-ஜூலை-202000:10:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அந்நாட்டுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ஈரான் 25 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு கச்சா எண்ணெயை விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இங்கே 52 இஞ்சுன்னு சொல்லிட்டு அமெரிக்காவுக்கு பயந்து பல்ட்டி அடிச்சிட்டார்..
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-202012:34:47 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanயாரா இருந்தாலும், முடிவு இதுதான், உங்கள் சோனியா ரிமோட் இருந்தாலும், இது தான் முடிவு. அமெரிக்காவுக்கு, எதிராக முடிவு எடுக்க யாரும் நினைக்க மாட்டார்கள்.. சீனா, அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதால்.. லாஸ் ல் தான் உள்ளது.. இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் .....
Rate this:
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
21-ஜூலை-202021:03:29 IST Report Abuse
Sundaram Bhanumoorthy If this news is true,then it is a tight slap on the once famous English daily which published this story ten days back.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X