மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது riding bike, arrested, Superbike,  Bengaluru expressway, bangalore

எலக்ட்ரானிக் சிட்டி : பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், நபர் ஒருவர், தன், 1,000 சிசி திறன் கொண்ட பைக்கில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற வீடியோ, 'புளுபீஸ்ட் 46' என்ற 'இன்ஸ்டிராகிராம்' என்ற சமூக வலைதளத்தில் பரவியது.


latest tamil news




இது குறித்து அறிந்த, குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று காலை, சந்தீப் பாட்டீல், தனது டுவிட்டரில் குறிப்பிட்டதாவது:பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் பைக்கில் சென்ற நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதிவேகமாக சென்று தன் உயிரை மட்டுமின்றி, மற்றவர்களின் உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவரை கைது செய்த போலீசார், அவரின் பைக்கை போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
24-ஜூலை-202009:10:19 IST Report Abuse
Varun Ramesh சமூக விரோதிகளிடம் கருணை காட்டுவது தவறு. கடும் தண்டனை தேவை.
Rate this:
Cancel
22-ஜூலை-202007:16:18 IST Report Abuse
தமிழ் பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு. இப்படிப்பட்ட வண்டிகள் விற்பதை அரசாங்கம் தடை செய்தாலென்ன.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
22-ஜூலை-202006:45:23 IST Report Abuse
Muguntharajan இதற்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். ஒரு வருடம் சிறை. ஒரு லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். வாகனத்தை இரு ஆண்டுகளுக்கு பறிமுதல் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X