மலேசியாவிற்குள் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கோலாலம்பூர் : மலேசியாவிற்கு வரும் பயணிகள் அரசின் நியமிக்கப்பட்ட முகாம்களில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மலேசியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மலேசிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பி வரும் பயணிகள் அனைவரும் ஜூலை 24 க்கு முதல் மலேசிய அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு மையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.


latest tamil news



இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் ஹோட்டல் அல்லது பிற தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தாலும், முழு தங்குமிட செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலை விடுத்து , அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். பயணிகள் உட்பட பலரம் விதிகளை மீறுகின்றனர். மேலும் வீட்டு தனிமைப் படுத்துதலில் இருப்பவர்களுக்கு கைகடிகாரம் (Wristband) அணிய வேண்டும். அதன்மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவர். ஆனால் வீட்டு தனிமையில் இருக்க வேண்டியவர்கள் சாலை உணவங்களில் உணவு உண்பதை காண முடிகிறது.


latest tamil news



மேலும் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய வெளிநாடுகளுக்கு திரும்பி வருபவர்களை அடையாளம் காண இந்த ரிஸ்ட் பேண்ட் (Wrist band) அறிமுகப்படுத்தப் பட்டன. வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இனி ஸ்வாப் சோதனைகளை எடுக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் இப்போது தானாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்படுவார்கள். மலேசியாவில் பணிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் மீதான சோதனை தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X