சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா ; மேலும் 399 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 399 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரில் தொடர்ந்து கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகளை கூடி வருவதாக சுகாதாரதுறை தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 399 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,434 ஆக உயர்ந்தது.


latest tamil news



நாட்டில் தொற்று பாதிக்கப்படுவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் என தெரிய வந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 9 சமூக பாதிப்புகள் அடங்கியுள்ளன. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரையும் மற்ற 8 பேர் பணி நியமன ஆணையை கொண்வர்கள் ஆவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X