11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
US, China, பொருளாதார தடை, அமெரிக்கா, சீனா

வாஷிங்டன்: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. உய்குர் மக்களை சித்ரவதை செய்ததில் தொடர்புள்ளதால் அமெரிக்க அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது. இந்த அடக்குமுறைகளில் தொடர்புடைய 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.


latest tamil news



பெய்ஜிங் லியுஹே மற்றும் ஸின்ஜியாங் சில்க் ரோட் நிறுவனங்கள் உய்குர் மக்கள் மீது ஜெனடிக் பரிசோதனைகளை நடத்தி, அவர்களை சீன அரசுக்கு அடையாளம் காட்ட உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஹெபெய் மெய்லிங், ஹெஷியன் ஹாவோலின் ஹெயர் அசஸரிஸ், நான்சாங் ஒ பிலிம் டெக், சாங்ஜி எஸ்குவெல் டெக்ஸ்டைல், கே.டி.கே. குழுமம், ஹெபெய் பிட்லான்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஹெஷியன் டய்டா அப்பாரல், சினர்ஜி டெக்ஸ்டைல் மற்றும் டான்யுவான் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் உய்குர் மக்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும்விதம், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்சித்துள்ளார். இந்நிலையில், இந்த 11 சீன நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
26-ஜூலை-202012:08:07 IST Report Abuse
K.ANBARASAN அமெரிக்காவை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். சீனாவை எதிர்க்க ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவும் தயக்கம் காட்டி வரும் வேளையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஆகிய நாடுகள் சீனாவிற்கு அல்லக்கையாக இருப்பது வெட்க கேடு. இங்கிலாந்து மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் தைரியமாக எதிர்க்கிறது. ரஷ்யா ஏற்கனவே சீனாவின் சொம்பு தூக்கி தான். ஆப்ரிக்க நாடுகளுக்கு நிறைய கடன் கொடுத்து யாரையும் போர்க்கொடி தூக்க விடாமல் வைத்திருப்பது சீனாவின் இன்னொரு நயவஞ்சகத்தனம். உலக நாடுகள் சீனாவின் கைப்பாவையாக மாறுவது ஆபத்தானது
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
22-ஜூலை-202012:05:42 IST Report Abuse
Rameeparithi சீனாவை கொஞ்சம் ஆட்டி வைக்க இது நல்ல தருணம் ...
Rate this:
Cancel
22-ஜூலை-202010:18:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உய்குர் மக்கள் மேல் கரிசனம் எல்லாம் இல்லை , சீனாவை பழிவாங்க வேண்டும் , அவர்கள் வளர்ச்சியை தடுக்க வேண்டும். உண்மை அதுதான். இந்தியாவும் இதை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X