பொது செய்தி

தமிழ்நாடு

'108' ஆம்புலன்ஸ் சேவையில் 400 பேர் வேலை பெற வாய்ப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை : அவசரகால, '108' ஆம்புலன்ஸ் சேவையில், 400 ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழக சுகாதாரத்துறை சார்பில், 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே., - இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம், 942 நான்கு சக்கர வாகனங்கள்; 41 இரு சக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவ சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாக, 200 ஓட்டுனர்கள், 200 அவசரகால மருத்துவ உதவியாளர்கள் என, 400 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

இது குறித்து, ஜி.வி.கே., - இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஓட்டுனர் பணியிடங்களில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள, 24 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பணியில் சேரலாம். ஓட்டுனர் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகள், பேட்ஜ் உரிமம் பெற்று, ஓராண்டும் நிறைவு செய்திருப்பது அவசியம் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணிஇடங்களில் சேர, பி.எஸ்சி., நர்சிங், டி.ஜி.என்.எம்., என்ற படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு, 19 முதல், 30 வரையாகும் இந்த பணிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க, முதல், இரண்டு சுற்று தேர்வுகள் தொலைபேசி வாயிலாகவும், இறுதி சுற்று நேர்முக தேர்வாகவும் நடைபெறும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்கள், 91541 89421, 91541 89422 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, தேர்வில் பங்கு பெறலாம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 91541 89423, 91541 89425 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். வரும், 23ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தொடர்பு கொண்டு, பணியிட தேர்வில் பங்கு பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X