பொது செய்தி

தமிழ்நாடு

வாகன வரி செலுத்த 31 வரை அவகாசம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை : வாகனங்களுக்கான சாலை வரியை, இம்மாதம், 31 வரை, அபராதமின்றி செலுத்தலாம் என, அரசு அவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும், முதல் காலாண்டு வரி செலுத்த, ஜூன் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு வாகன உரிமையாளர் சங்கங்கள், கொரோனா பாதிப்பால், வாகனங்கள் இயங்காத நிலையில், காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், தமிழக அரசு, நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், 'அனைத்து வாகனங்களுக்குமான, முதல் காலாண்டு வரியை, இம்மாதம், 31 வரை, அபராதமின்றி செலுத்தலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X