அரசியல் செய்தி

தமிழ்நாடு

நியாய விலை கடைகளில் விரைவில், 'மாஸ்க்' சப்ளை ; அமைச்சர் உதயகுமார்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 நியாய விலை கடைகளில் விரைவில், 'மாஸ்க்' சப்ளை ; அமைச்சர் உதயகுமார்

திருவொற்றியூர் : -''நியாய விலை கடைகளில், முக கவசம் வழங்கும் பணி விரைவில் துவங்கும்,'' என, அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில், களப்பணியாளர்களுக்கு, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.பின், அவர் அளித்த பேட்டி:மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில், 'ஆக்சிஜன்' குழாய்கள் அதிகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், மூச்சு திணறலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.கபசுர குடிநீர்தமிழகத்தில், 19.80 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 776 பேர் குணமடைந்துள்ளனர். இது, 69 சதவீதமாகும். குறிப்பாக, நேற்று மட்டும், 3,861 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.முதல்வரின் சீரிய நடவடிக்கையால், 10 ஆயிரத்து, 400 கோடி ரூபாயில், ஆறு மாவட்டங்களில், புதிய தொழில்கள் துவங்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 13 ஆயிரத்து, 507 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.நோய் தடுப்பு பணிகள், விவசாயத்தில் கவனம் என, அந்த வரிசையில், தொழில் துறையை மீட்டெடுப்பதில், முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது.

திருவொற்றியூரில், சிறப்பு முகாம்கள் மூலம், 15 ஆயிரத்து, 724 பேருக்கு, இணை நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். இங்கு, 69 ஆயிரத்து, 880 லிட்டர் கபசுர குடிநீர், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அமைப்புசாரா தொழிலாளர்கள், 35 லட்சம் பேருக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், இரு முறையும், 15 கிலோ அரிசி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. விடுபட்டவர்களுக்கும் வழங்கும் பணி நடக்கிறது.

திசை திருப்ப முயற்சி : மேலும், 2.1 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, நான்கு மாதங்கள் விலையில்லாமல் பொருட்கள், நிவாரணம் வழங்கப்பட்டன.மதுரையில், ஒரு வாரத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு உள்ளது. இருப்பினும், தொற்றை கட்டுப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.நியாய விலை கடைகளில், இலவச முக கவசம் வழங்கும் பணி, விரைவில் துவங்கும். தரம் மற்றும் விலை குறித்து, மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.

மின் கட்டணம் குறித்து, மின் துறை அமைச்சர் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். முடிந்து போன விஷயத்திற்கு, தி.மு.க., போராட்டம் நடத்துவது, மக்களை பீதி அடைய செய்யும் செயல்; திசை திருப்பும் முயற்சி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X