பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு 63 சதவீதம் பேர் குணமடைந்தனர்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், 11.55 லட்சம் பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 63 சதவீதம் பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து உள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின், நேற்றைய அறிக்கை: நாட்டில், கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்ச்சியாக நடைபெறுவதால், நேற்று மட்டும், 37 ஆயிரத்து, 148 பேரிடம், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 191 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம், 3.33 லட்சம் பேரிடமும், இதுவரை, 1.44 கோடி பேரிடமும், தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.பாதிப்பில், மஹா., தமிழகம், டில்லி, கர்நாடகா மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

மஹா.,வில், 3.19 லட்சம் பேரும், தமிழகத்தில், 1.76 லட்சம்; டில்லியில், 1.24 லட்சம்; கர்நாடகாவில், 67 ஆயிரத்து, 420; ஆந்திராவில், 53 ஆயிரத்து, 724; உ.பி.,யில், 51 ஆயிரத்து, 160; குஜராத்தில், 49 ஆயிரத்து, 353; தெலுங்கானாவில், 46 ஆயிரத்து, 274; மே.வங்கத்தில், 44 ஆயிரத்து, 769 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டோரில், 4.03 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்; 7.25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நோய் தொற்றில் இருந்து, 63 சதவீதம் பேர் மீண்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில், மஹா.,வில், 176 பேரும், கர்நாடகாவில், 72; தமிழகத்தில், 70; ஆந்திராவில், 54; உ.பி.,யில், 46; மே.வங்கம் மற்றும் டில்லியில், தலா, 35 பேர் உள்ளிட்ட, 587 பேர் வைரஸ் தொற்றால் பலியாயினர்.

இதையடுத்து, இறந்தோர் எண்ணிக்கை, 28 ஆயிரத்து, 084 ஆக உயர்ந்துள்ளது. இதில், 12 ஆயிரத்து, 030 பேருடன் மஹா., முதலிடத்திலும், டில்லி, 3,663 பேருடன் இரண்டாம் இடத்திலும், தமிழகம், 2,551 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.அடுத்ததாக, குஜராத்தில், 2,162; கர்நாடகாவில், 1,403; உ.பி.,யில், 1,192; மே.வங்கத்தில், 1,147 பேரும் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X