சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் சுமை, மன அழுத்தம் 50 ஓட்டுனர்கள் தற்கொலை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை : -கடன் தவணைகளை செலுத்த முடியாமல், மன அழுத்தத்துக்கு ஆளாகும் வாடகை வாகன ஓட்டுனர்கள், 50க்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்து உள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை, வாடகைக்கு இயக்கி சம்பாதிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், போதிய கல்வி அறிவற்றவர்களாக உள்ளனர். இவர்களில் பலர், தனியார் நிதி நிறுவனங்கள் நீட்டும் பத்திரங்களில் கையெழுத்திட்டு, அதிக வட்டிக்கு கடன் பெற்று, சொந்த வாகனங்களை வாங்கியுள்ளனர்.தற்போது, கொரோனாவால், நான்கு மாதங்களாக சவாரி இல்லாமல், வாகனங்களை நிறுத்தியுள்ளனர். 'ஓலா, உபர்' உள்ளிட்ட நிறுவனங்களும் சவாரி வழங்குவதில்லை.

இந்நிலையில், கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள், கூட்டு வட்டியுடன் கடன் தொகையைக் கேட்டு, நெருக்கடி கொடுக்கின்றன. பல நிறுவனங்கள், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றன. இதனால், பலர் வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று, கடனை அடைக்கின்றனர். சிலர் வாகனங்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், தற்கொலை செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர்களுக்கு, உரிய மனநல ஆலோசனையும், கடனுதவியும் அளித்து, அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுனர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X