தாக்கரே பங்கேற்பார்

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தாக்கரே பங்கேற்பார்


அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக, சிவசேனா தொண்டர்கள், ரத்தம் சிந்தி, பல தியாகங்களை செய்துள்ளனர். ராமர் கோவிலுடன், சிவசேனாவுக்கு, உணர்வு பூர்வமான, மத ரீதியிலான, பிணைப்பு உள்ளது. எனவே, அடுத்த மாதம், 5ல் நடைபெறும் பூமி பூஜையில், சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான, உத்தவ் தாக்கரே, நிச்சயம் பங்கேற்பார்.

- சஞ்சய் ராவத் , மூத்த தலைவர், சிவசேனா

பா.ஜ.,வின் சாதனைகள்

'கொரோனா' வைரஸ் பரவத்துவங்கியதும், கடந்த பிப்ரவரியில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி, மார்ச்சில், ம.பி., அரசை கவிழ்த்தது, ஏப்ரலில், மக்களை மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே மாதம், பா.ஜ., அரசின் ஆறாம் ஆண்டு விழா, ஜூனில், பீஹாரில், 'ஆன்லைன்' மாநாடு, ஜூலையில், ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சித்ததே, மத்திய அரசின் சாதனைகளாகும்.

- ராகுல் எம்.பி., காங்.

,'டுவிட்'களின் கட்சி காங்.,

ராகுல், தினசரி, தன் 'டுவிட்டர்' பக்கத்தில், தொடர் பதிவுகளை வெளியிடுவதையே, வேலையாக கொண்டுள்ளார். மக்கள் நலனுக்காக, அவர்கள் எதையும் செய்வதில்லை. கட்சியை விட்டு, ஒவ்வொரு தலைவர்களாக விலகி வருகின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, விரக்தியில் மத்திய அரசு மீது, குற்றம் சுமத்தி வருகின்றனர்.

- பிரகாஷ் ஜாவடேகர் , மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜூலை-202016:10:31 IST Report Abuse
sankaseshan தியாகம் செஞ்சுட்டாங்களாம் தியாகத்துக்கு விலை பேசும் வீணர்கள் பவாரிடம் அனுமதி வாங்கியாச்சா ?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜூலை-202010:16:08 IST Report Abuse
Indhuindian ராமர் கோயில் விஷா தாக்கரே பங்கேற்பார். மதியாதார் வாசல் மிதியாமை கோடி போறும்ன்னு அவ்வயார் சொன்னத அவருக்கு யாரவது சொல்ல வேண்டாமா. அது டிரஸ்ட் சம்பந்தமான நிகஷ்சி. ட்ருஸ்ட்டோட இஷ்டம் யாரை கூப்பிடுவது யாரை வோதுக்குவதுன்னு. அங்கே போயி அக்ஷயா விருந்தாளியா போயி அவமானபடனோம்ம்னு சங்கல்பம் பண்ணிக்கிட்டா யார் என்ன பண்ண முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X