பொது செய்தி

தமிழ்நாடு

அதிரடியாக உயரும் வெள்ளி கிராம் ரூ.60ஐ தாண்டியது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை : முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதால், தமிழகத்தில், ௧ கிராம் வெள்ளி விலை, 60 ரூபாயை தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அதை, செயின், கம்மல், மோதிரம் என, குறைந்த எடையில், மக்கள், ஆபரணங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.மதிப்புமிகு உலோகமான வெள்ளி விலை, தங்கத்தை விட, குறைவாக உள்ளது. தங்கத்திற்கு இணை இதனால், வசதியானவர்கள், வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை சாமான்கள், தட்டு, டம்ளர் போன்ற பொருட்களாகவும்; ஏழைகள் வெள்ளி ஆபரணங்களையும் பயன்படுத்துகின்றனர்.

இதனால், தங்கத்திற்கு இணையாக, வெள்ளியின் பயன்பாடும் உள்ளது.வைரஸ் பரவலால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள், மற்ற முதலீட்டு திட்டங்களை விட, பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன், 37 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதற்கு ஏற்ப, வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம், தங்கம் கிராம், 4,702 ரூபாய்; சவரன், 37 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது.

1 கிராம் வெள்ளி, 57.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 4,717 ரூபாய்க்கு விற்பனையானது. சவரன், 120 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து, 736 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு, அதிரடியாக, 2.70 ரூபாய் உயர்ந்து, 60.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதிகளவில் முதலீடுஇது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஏற்கனவே, 15 ஆண்டுகளுக்கு பின், வெள்ளி விலை அதிகரித்தது. பின், அதன் விலை குறைந்தது. தற்போது, தங்கம் தொடர்ந்து அதிகரித்து, அதன் விலை உச்சத்தில் உள்ளது.

இதனால், முதலீட்டாளர்கள், வெள்ளியில், அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். முதலீட்டாளர்களின் வரவேற்புடன், தொழிற்சாலைகளுக்கான வெள்ளி பயன்பாடும் அதிகரித்துள்ளது. உலகளவில் ராக்கெட், ராணுவ தளவாடங்களுக்கும் வெள்ளி பயன்படுத்தப் படுகிறது. இதுபோன்ற காரணங்களால், தற்போது, வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X