வீடுகளுக்கு ரேஷன் பொருள் டில்லியில் அமலுக்கு வருகிறது ; அரவிந்த் கெஜ்ரிவால்

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வீடுகளுக்கு ரேஷன் பொருள்  டில்லியில் அமலுக்கு வருகிறது ; அரவிந்த் கெஜ்ரிவால்

''பொதுமக்களின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை நேரடியாக வினியோகம் செய்யும் திட்டம், டில்லியில் அமலுக்கு வரவுள்ளது,'' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.இப்பொருட்களை, பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்குவதில், பல்வேறு சிரமங்கள் இருப்பதுடன், முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் திட்டம், டில்லியில் அறிமுகமாகிறது.

சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இருந்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், துணை நிலை ஆளுனர் தரப்பில், பல்வேறு விளக்கங்கள், சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பியதால், தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி, இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இது குறித்து, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நேற்று கூறியதாவது:பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை தருவதற்கான, 'முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா' திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், 'பேக்' செய்யப்பட்டு, நேரடியாக வீடுகளில் வினியோகம் செய்யப்படும். இந்த புரட்சிகர திட்டத்திற்கு, ஒப்பந்த புள்ளி கோருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள், ஆறு மாதங்களுக்குள் முடிவடையும்.இந்த திட்டத்துடன், மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டமும், அமலுக்கு வரும். ரேஷன் கடைகளுக்கு வர விரும்பாதவர்களுக்கு மட்டுமே, நேரடியாக பொருட்கள் வினியோகம் செய்யப்படும். கடைகளுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் வந்து, பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
22-ஜூலை-202008:56:14 IST Report Abuse
vbs manian பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X