ரூ.1.57 லட்சம் கோடி பட்ஜெட் ஐரோப்பிய மாநாட்டில் ஒப்புதல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பிரசல்ஸ் : ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாட்டில், கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக, 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த வாரம், பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாடு, துவங்கியது.இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மீட்சிக்கும், கொரோனா நிவாரண நிதியம் உருவாக்கவும், 1.57 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது.இதில், 27 உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல், இழுபறி நீடித்தது. பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை, கொரோனா நிவாரண நிதியத்திற்கு, 37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தின. ஆனால், நெதர்லாந்து தலைமையிலான ஐந்து நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்ததால், இரவு, பகலாக கூட்டம் நடைபெற்றும், எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, கூட்டம் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பல மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில், உடன்பாடு ஏற்பட்டது. நான்காம் நாளாக, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார மீட்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியம் அமைக்க, 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் தீர்மானத்திற்கு, முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது.அதே சமயம், நெதர்லாந்தின் கோரிக்கையை ஏற்று, கொரோனா நிவாரண நிதியத்திற்கான ஒதுக்கீடு, 33 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

அத்துடன், இத்தொகை, உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையும், தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். இது குறித்து, ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மெர்கல் கூறியதாவது:கொரோனாவால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வரலாறு காணாத பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீள, அனைத்து நாடுகளும் முயற்சிக்கின்றன. அதனால், சில அசாதாரண நிகழ்வுகளை சந்தித்தோம். அது போலவே, அசாதாரண புதிய வழிகள் நமக்கு தேவைப்படுகின்றன. அதன் மூலம், நாம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டெழுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கடும் பாதிப்பு : ஐரோப்பிய நாடுகளில், கொரோனாவால், 1.35 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, ஐரோப்பிய கூட்டமைப்பின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8.3 சதவீதம் பின்னடைவை காணும் என, கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X