கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை நடத்த அனுமதி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, திருப்போரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மனிடம், ஒரு நாள் விசாரணை நடத்த போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, செங்காடு கிராமத்தில், கோவில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில், திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், 45; ரியல் எஸ்டேட் அதிபர் குமார், 49, இடையே, கடந்த, 11ல், மோதல் ஏற்பட்டது.குமார் தரப்பினர் கத்தியால் தாக்க, எம்.எல்.ஏ., இதயவர்மன் தரப்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது.இது குறித்து விசாரித்த, திருப்போரூர் போலீசார், எம்.எல்.ஏ., இதயவர்மன், குமார் உட்பட, 12 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ., இதயவர்மனிடம், மூன்று நாட்கள் விசாரணை செய்ய, திருப்போரூர் போலீசார், 'ஆன்லைன்' வாயிலாக, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி காயத்ரி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, எம்.எல்.ஏ.,வின் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகி, ''வழக்கு தொடர்பான விசாரணையை போலீசார் முடித்து விட்டனர். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.'காவலில் எடுத்து விசாரிக்க, மூன்று நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும்' என, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், நீதிபதியிடம் கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காயத்ரி, எம்.எல்.ஏ., இதயவர்மனை, ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த, போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மாலை, 3:40 மணிக்கு, நீதிமன்றத்தில் இருந்து, விசாரணைக்காக, எம்.எல்.ஏ.,வை, போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X