'சர்க்கஸ்' விலங்குகள் கணக்கெடுப்பு உயிரியல் பூங்காக்களுக்கு செல்லுமா?

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : கொரோனாவால், நாட்டில் செயல்படாமல் உள்ள, 'சர்க்கஸ்' விலங்குகளை கணக்கெடுக்கவும், அவற்றை, உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கவும், இந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பிற்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டினிஇந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:கொரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுதும், சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்படாமல் உள்ளது.அவர்களிடம் உள்ள விலங்குகள், உரிய முறையில் பராமரிக்கப் படாமல், பட்டினி மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக, தகவல்கள் கிடைத்து உள்ளன. இதனால், விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த பிரச்னையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதோடு, சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்காக, அதில் பங்கேற்கும் விலங்குகளை, கண்காட்சி, பயிற்சி என, கொடுமைப்படுத்துகின்றனர்.

பயிற்சி அளிப்பவர்கள் கூர்மையான ஆயுதங்கள், சவுக்குகள், உலோக கம்பிகளை பயன் படுத்துகின்றனர். இது, விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. விலங்குகளை சர்க்கஸ்களில் பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மறுவாழ்வுஇந்த மனு, நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரஜனிஷ் பட்நகர் ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'கொரோனா பாதிப்பால், செயல்படாத நிலையில் உள்ள சர்க்கஸ்களில், பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளின் எண்ணிக்கையை கண்டறிய, நாடு முழுதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.'அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க, அருகில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து, பரிசீலிக்க வேண்டும்' என, இந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சர்க்கசில் விலங்குகளை பயன்படுத்துவது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டு இருக்கிறது.இதுதொடர்பாக, மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம், வனத்துறை அமைச்சகம், மத்திய மிருகக்காட்சி சாலைகள் ஆணையம் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவை, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X