கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு : தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு : 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : ஜூலை 21, 2020
Share
 கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு : 'தினமலர்' செய்தி எதிரொலி

திருப்பூர்:நோய் பரவல் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள, எஸ்.வி., காலனியில், நான்கு வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்போர் வெளிேய செல்லவும், வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதி பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்த, கலெக்டர் விஜயகார்த்திகேயன் அப்பகுதியில், ஆய்வு நடத்தினார். எம்.எல்.ஏ., விஜயகுமார், நகர் நல அலுவலர் பூபதி மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.கடைகளில், தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய வகையில் இருப்பு வைக்கவும், குடியிருப்புவாசிகளுக்கு உரிய முறையில் வழங்கவும் தெரிவிக்கப்பட்டது. நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வ தொண்டர்கள் தொடர்பு எண், கடைகள் எண் மற்றும் அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் குறித்த விவரம் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X