பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர் நலன் மக்களுக்கு வேண்டுகோள்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

அவிநாசி:'துாய்மை பணியாளர்களின் நலன் காக்க, ஊராட்சி உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டால், சுகாதாரப்பணி மேம்படும்' என, தெரிவிக்கப்பட்டது.சேவூர் அருகேயுள்ள, முறியாண்டாம்பாளையம் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளருக்கான ஆலோசனை கூட்டம், சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.அவிநாசி பி.டி.ஓ., (ஊராட்சிகள்) ஹரிஹரன் பேசியதாவது;சுகாதார பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களுக்கு, அரசின் சார்பில் மாதம், 2,600 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, அந்தந்த வார்டுகளில் உள்ள ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து, குடியிருப்புவாசிகள், கடைக்காரர்களிடம் இருந்து, சிறிய தொகையை வசூலித்து, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கும் பட்சத்தில், அவர்களின் பொருளாதார நிலை ஓரளவு மேம்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X