பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழைக்கு பச்சை கம்பளம்; 3 ஆயிரம் மரக்கன்று நடவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், கைத்தமலை அருகே உள்ள, மாதேஸ்வரன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம், மாவட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பெருமொத்த இலக்கு, 10 லட்சத்தை பூர்த்தி செய்ய, 'வெற்றி' அமைப்பு திட்டமிட்டுள்ளது.தொழில்துறையினர், விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் கரம் கோர்த்து, ஆறாவது திட்டத்தை வேகமாக நகர்த்தி செல்கின்றனர்.அவ்வகையில், ஊத்துக்குளி, கதித்தமலை அருகே உள்ள அய்யம்பாளையம், மாதேஸ்வரன் கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. அதாவது, ஆறாவது திட்டத்தின், 11வது நிகழ்ச்சி நேற்று நடந்தது.இயற்கை தன்னார்வலர்கள், ஊத்துக்குளி ரோட்டரி நிர்வாகிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் இணைந்து, மரக்கன்றுகளை நட்டனர். நாவல், நாட்டுவேம்பு, செம்மரம், இலுப்பை, பூவரசு, கொடுக்காப்புளி, நீர்மருது, சிசு, குமிழ், நாட்டு வாகை, துாங்குவாகை, அத்தி, நாட்டுபலா, மலைவேம்பு, மூங்கில் என, 15 வகையான, 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.பாதுகாப்பு வேலி அமைத்து, குறைந்தபட்ச தண்ணீர் வசதியுள்ள நிலத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்பு வோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X