குழந்தை காப்பகங்களுக்கு நிதி மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்'

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : குழந்தைகள் காப்பகங்கள் நடத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களை தாக்கல் செய்யுமாறு கோரி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மாநில அரசுகள் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகங்கள் நடத்தப்படுகின்றன.இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள், கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசுகளிடம், உச்ச நீதிமன்றம், கடந்த, ஏப்ரலில் கேட்டு இருந்தது.இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவி செய்ய, வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை, 'அமிகஸ் கியூரி, யாக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள், நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவிந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

நீதிபதிகள் கூறியதாவது:குழந்தைகள் காப்பகங்கள் நடத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒதுக்கிய நிதி விபரங்கள் பற்றி, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இல்லங்களில், குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, மாநில அரசுகளிடம், அமிகஸ் கியூரி கேட்டுள்ளார். அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த பின், நாங்கள் சில உத்தரவுகளை பிறப்பிப்போம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். வழக்கு விசாரணை, ஆக., 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X