பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு ஆண்டுகளுக்கு குடிநீர் கட்டணம் வசூலிப்பு: மங்கலம் மக்கள் அதிர்ச்சி!

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

திருப்பூர்,:குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் திட்டத்தில், நான்கு ஆண்டுகளுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மங்கலம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில், 4,018 வீட்டு இணைப்புகள் உள்ளன. மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், குடிநீர் குழாய் இணைப்புகளை, முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மங்கலம் ஊராட்சியில், முறையற்ற இணைப்பு களை வரன்முறை செய்ய, 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கேட்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் மருதாசலமூர்த்தி கூறுகையில், ''நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, முறைகேடாக, இணைப்புகள் வழங்கியுள்ளனர். ஊராட்சியில், குடிநீர் கட்டணமாக, 1.20 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. மின் கட்டணமாக, 68 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.இன்னும் பல செலவுகளை சமாளிக்க இயலாததால், 'டிபாசிட்' , 'சென்டேஜ்' கட்டணம், அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கான குடிநீர் கட்டணத்துடன், முறைப்படுத்த தீர்மானித்துள்ளோம்; மக்கள் செலுத்தும் பணத்துக்கு ரசீது வழங்கப்படும்,'' என்றார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது,''டிபாசிட்' தொகையை, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துகொள்ளலாம். 'சென்டேஜ்' கட்டணம் வசூலிக்கலாம். இருப்பினும், குடிநீர் கட்டணத்தை வசூலிப்பது குறித்து, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை,'' என்றார்.பொதுமக்கள் கூறுகையில், ''ஒரேயடியாக நான்கு ஆண்டுக்கு, கட்டணம் வசூலிப்பது முறையல்ல. ஏற்கனவே, கொரோனா பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறோம். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X