சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் நள்ளிரவில் கனமழை :பஸ் டிப்போவை தண்ணீர் சூழ்ந்தது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 வால்பாறையில் நள்ளிரவில் கனமழை :பஸ் டிப்போவை தண்ணீர் சூழ்ந்தது

வால்பாறை:வால்பாறையில் நள்ளிரவில் பெய்த கனமழையால், அரசு போக்குவரத்துக்கழக டிப்போவுக்குள் தண்ணீர் புகுந்தது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து அதிகரித்து, சோலையாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.மேல்நீராறு அணையில் இருந்து, வினாடிக்கு, 1,234 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து, 168 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 108.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,116 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,277 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது.வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில், நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.அரசு போக்குவரத்துக்கழக பஸ் டிப்போவுக்குள் மழை நீர் புகுந்ததால், இரவோடு இரவாக அனைத்து பஸ்களும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 66, வால்பாறை - 56, மேல்நீராறு - 110, கீழ்நீராறு - 42, காடம்பாறை - 42, மேல்ஆழியாறு - 67, பரம்பிக்குளம் - 76, துணக்கடவு - 65, மணக்கடவு - 49, பெருவாரிப்பள்ளம் - 70, சர்க்கார்பதி - 54, நவமலை - 36, வேட்டைக்காரன்புதுார் - 19, நெகமம் - 12, பொள்ளாச்சி - 17, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X