கொரோனா அதிகரிப்பு; மக்கள் அச்சம்!

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் ஒரே வீட்டில், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆச்சிபட்டி கல்யாணிநகரில், ஒரே வீட்டை சேர்ந்த, இரண்டு சிறுவர்கள் உள்பட, ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பொள்ளாச்சியிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஆச்சிபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் மட்டுமின்றி, கல்யாணி நகர் முழுவதும் காலை, மாலை என, இருவேளையும் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.சுற்றுப்பகுதி வீடுகளில் வசிப்போருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சி பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு அடுத்துள்ள மெட்டுவாவியில், தனியார் மெத்தை தயாரிப்பு கம்பெனியில், மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.அவர்களில், நான்கு பேர் காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 18ம் தேதி பரிசோதனை செய்தனர். நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, தனியார் கம்பெனி 'சீல்' வைக்கப்பட்டது. அங்கு, பணிபுரிந்த, 46 பேரும் கம்பெனியில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும், பொள்ளாச்சியிலுள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில்பாளையத்தில், 40 வயதானவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய மனைவி மற்றும் தந்தைக்கும், அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. மூவரும் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்கள் குடியிருப்பு சுற்றுப்பகுதிக்கு, சுகாதாரத்துறையினர் 'சீல்' வைத்து, கிருமிநாசினி மருந்து தெளித்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X