பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கபசுர குடிநீர் வினியோகம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்  கபசுர குடிநீர் வினியோகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,), கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கபசுர குடிநீர் வினியோகிக்கும் நிகழ்ச்சி, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகானந்தம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கர், ஜெயந்தி, தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன், துணைத்தலைவர் ஆதித்யா, உறுப்பினர் விஜயகுமார் பங்கேற்றனர். லைசென்ஸ் புதுப்பித்தல், லைசென்ஸ் புதிதாக எடுக்க வந்த வாகன ஓட்டுனர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., கூறுகையில், ''அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தினமும், 200 பேர் வீதம், ஒரு வார காலத்துக்கு வழங்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிப்பது, முக கவசம் அணிவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X