பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு தடை: வனவிலங்குகள் ஜாலி உலா

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 சுற்றுலா பயணிகளுக்கு தடை: வனவிலங்குகள் ஜாலி உலா

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வனவிலங்குகள் அச்சுறுத்தலின்றி, நிம்மதியாக உலா வருகின்றன.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிகள், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளாக உள்ளன. ஆழியாறு குரங்கு அருவி, வால்பாறை பகுதிக்கு தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.குரங்கு அருவியில் இருந்து வால்பாறை வரையிலும், ரோட்டோரம் குரங்கு, வரையாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுகின்றன.இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் உணவு, திண்பண்டங்களை கொடுத்து பழக்கியதால், குரங்குகள் உணவுக்காக ரோட்டோரம் கையேந்தி நிற்கின்றன. அதிலும், குரங்கு அருவி அருகில் எப்போதும், 30க்கும் மேற்பட்ட குரங்குகள், சுற்றுலா பயணிகளிடம் உணவு பெற்றும், பறித்து சாப்பிடுவதையும் வழக்கமாக்கியுள்ளன.வனத்தில் உணவு தேடி உண்டு வாழும் குரங்குகள், தங்கள் இயற்கை குணத்தை இழந்து, உணவுக்காக சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து, வழிமேல் விழி வைத்து காத்துக்கிடக்கின்றன.அதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் பாலித்தீன் கவருடன் வீசும், கழிவுகளை உட்கொண்டு, குரங்குகள், வரையாடுகள் பரிதாபமாக மரணிக்கின்றன. 'செல்பி' எடுப்பதால், வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தன.இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஆழியாறு, வால்பாறை சுற்றுப்பகுதிகளில், வனவிலங்குகள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி ஜாலியாக உலா வருகின்றன. மேலும், வாகன போக்குவரத்து குறைந்ததால், குரங்குகள், வரையாடுகள் வால்பாறை ரோட்டில் 'ஜாலியாக' ஓய்வெடுக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X