நியூ ஸ்கீம் ரோட்டில் ஓட்டுனர்கள் தடுமாற்றம்: ஊரடங்கு காலத்தில் புதுப்பிக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 நியூ ஸ்கீம் ரோட்டில் ஓட்டுனர்கள் தடுமாற்றம்: ஊரடங்கு காலத்தில் புதுப்பிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு குண்டும், குழியுமாக உருமாறி உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்லடம், திருப்பூர், உடுமலை, பழநி செல்வதற்கு வசதியாக, நியூஸ்கீம் ரோடு அமைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் - பல்லடம் ரோடு இணைப்புச்சாலையாக அமைக்கப்பட்ட ரோடு, நீண்ட இழுபறிக்கு பின்னர் கான்கிரீட் ரோடாக மாற்றப்பட்டது.ரோடு தரமாக அமைக்கப்பட்டதால், வாகனங்கள் சென்று வர எளிதாக இருந்தது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக கான்கிரீட் ரோடு தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழிகள் பணிகள் முடிந்ததும் அரைகுறையாக மூடப்பட்டன.மேடு, பள்ளமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ரோடு குண்டும், குழியுமாக மாறி விபத்துக்களை ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி விட்டது.மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டு, ரோட்டில் மழைநீர் தேங்கி புத்தக கடை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் புகுந்தது.இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, பணிகளை விரைந்து முடிக்க துணை சபாநாயகர் மற்றும் அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் நடத்தி, நியூஸ்கீம் ரோடு பணிகளை விரைந்து முடித்து சீரமைப்பு பணிகளை துவங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.ஆனால், பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. தற்போது, சிக்னல் அருகே ரோடு திரும்பும் இடத்தில் பெரிய பள்ளமாக இருப்பதால், கவனமின்றி வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தால், நியூஸ்கீம் ரோடு குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது. வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த முக்கிய ரோட்டில், பணிகளை விரைந்து முடித்து, ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாத சூழலில், இந்த ரோட்டை உடனடியாக சீரமைத்தால் பயனாக இருக்கும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X