பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் சுகாதார மேம்பாடு: கழிப்பறைகள் சீரமைப்பு தீவிரம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 பள்ளியில் சுகாதார மேம்பாடு: கழிப்பறைகள் சீரமைப்பு தீவிரம்

உடுமலை:உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும், கழிப்பறை நீண்ட நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாமல் இருந்தது. பள்ளியின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வாக, கழிப்பறைகள் மேம்படுத்தப்படுகிறது. அரசின் சார்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிப்பறைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், மாற்றுதிறனாளிகளுக்கான நவீன கழிப்பறை கட்டுவதற்கும், நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்குள், சுகாதாரத்தை மேம்படுத்த பணிகள் தீவிரமாக நடப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X