பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் ஒப்படைப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 1,385 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு இருந்தது. பொள்ளாச்சி பகுதியில் கிராம நிர்வாக அலுவலரால் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.தாசில்தார் தணிகைவேல் கூறியதாவது:சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகை பெறாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள், மற்ற மாவட்டத்தை சேர்ந்த, பொள்ளாச்சியில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் என மொத்தம், 1,385 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.அடையாள அட்டை வைத்துள்ள மாற்றறுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை விடுபட்டு இருந்தால் உடனடியாக வருவாய்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X