சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் வந்த குரங்கு, பறவைகள் பறிமுதல்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

யானைக்கவுனி, சரக்கு ரயில் மூலம், ஹவுராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, இரண்டு குரங்கு, ஒரு கூண்டு முழுதும் அடைக்கப்பட்டிருந்த பறவைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.தகவல்கொரோனா ஊரடங்கால், நாடு முழுதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக, சரக்கு ரயில் சேவை மட்டும், இயங்கி வருகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை, மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து, சென்னை, சென்ட்ரல் வந்த சரக்கு ரயிலில், பார்சலில், குரங்கு மற்றும் அரியவகை உயிரினங்களை கடத்தி வருவதாக, யானைக்கவுனி போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.தகவல் அடிப்படையில், சென்ட்ரல் ரயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்து, வெளியே வரும் வாகனங்களை சோதனையிட்டனர். 'டாடா ஏஸ்'அதில், 'டாடா ஏஸ்' வாகனம் ஒன்றில், இரண்டு குரங்கு, ஒரு கூண்டு முழுதும் அடைக்கப்பட்டிருந்த பறவைகள் உள்ளிட்டவை, எடுத்த செல்லப்பட்டது தெரிய வந்தது.போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டிச் சென்ற, சூளையைச் சேர்ந்த ஜேசு, 32, காரில் பின் தொடர்ந்த, மதுரையைச் சேர்ந்த ரியாஸ், 34, முகமது ஆசிப், 34, கொசப்பேட்டையைச் சேர்ந்த பரத், 28, ஆகியோரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், ஹவுராவில் இருந்து ரயில் பார்சல் மூலம், சென்னை கொண்டு வரப்பட்ட, குரங்கு மற்றும் பறவைகளை, 'டாடா ஏஸ்' வாகனத்தில், புரசைவாக்கம் எடுத்து செல்வதாக, பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு, ஐந்து லட்ச ரூபாய் வரை இருக்கக்கூடும் என தெரிகிறது. இதனிடையே, யானைகவுனி போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு, பறவைகள் மற்றும் பிடிபட்ட நால்வரையும், வேளச்சேரி வனத்துறையிடம் ஒப்படைத்ததனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X