சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்றவர் சரண்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

வியாசர்பாடி,:சென்னையில், மனைவியை வெட்டிக் கொன்றவர் போலீசில் சரணடைந்தார்.சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார், 31. முதல் மனைவியை விவாகரத்து செய்தவர், வியாசர்பாடி, சுந்தரம் தெருவைச் சேர்ந்த ரமணி, 35, என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்தார்.ரமணி, இரு மாதங்களுக்கு முன், கணவருடன் சண்டையிட்டு, அம்மா வீட்டிற்கு சென்றார். நேற்று இரவு, ரமணியை சமாதானம் செய்து, அழைத்து வந்த சார்லஸ், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.போலீசார், ரமணியின் உடலைக் கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், ரமணி வேறு வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயம், சார்லசுக்கு தெரிய வர, அவரை கொலை செய்துள்ளார் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X