பொது செய்தி

தமிழ்நாடு

எலுமிச்சை விளைச்சல் இல்லைவிலையும் இல்லை: விவசாயிகள் கவலை

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

சிவகங்கை:எலுமிச்சம் பழம் விளைச்சலும் இல்லை, விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிவகங்கை அருகே சக்கந்தியை சுற்றியுள்ள கிராமங்களில்விவசாயிகள் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர்.
கடந்த மாதம் வரை மழை பெய்யாததால்போர்வெல்களில் தண்ணீர் இல்லை. இதன் காரணமாக எலுமிச்சை விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.கொரோனா பாதிக்கப் படாமல் தப்ப வெந்நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தொடர்ந்து குடிக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ குணமிருந்தும் எலுமிச்சம் பழத்தின் விலை மட்டும் அதிகரிக்கவில்லை.

உலகாதபுரம் விவசாயி தனசேகரன் கூறியதாவது: எலுமிச்சையின் விலை ஒரு பழம் ஒன்றுக்கு 3 முதல் 4 ரூபாய் வரை மட்டுமே மார்க்கெட்டில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. வெளியில் மக்களுக்கு ஒரு பழம் 7 முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு எலுமிச்சை விலையும் இல்லை. விளைச்சலும் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X