சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' பணியாளர்கள் கடையை மூடி போராட்டம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் முழுதும், நேற்று ஒரு மணி நேரம், 'டாஸ்மாக்' மதுக் கடைகளை பூட்டி, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள், வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவர், கொரோனா பாதிப்பில் உயிரிழந்தனர்.இதையடுத்து, அவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று காலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 153 டாஸ்மாக் கடைகளையும், காலை, 10 முதல், 11:00 மணி வரை பூட்டி, கடைகள் முன் நின்று, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

ரூ.2.12 லட்சம் கொள்ளைநாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத்த கவுண்டனுாரில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. விற்பனையாளர்களாக, ராஜ்குமார், 31, சரவணன், 32, ரமேஷ், 43, பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மூவரும் கடையை மூடிக் கொண்டு இருந்தனர்.அப்போது, திடீரென வந்த, நான்கு வாலிபர்கள், சரவணனை தாக்கி, அவர் வைத்திருந்த அன்றைய விற்பனை தொகையான, ௨ லட்சத்து, 12 ஆயிரம் ரூபாயை பறித்தனர். தடுக்க முயன்ற ராஜ்குமார், ரமேஷை, மர்ம கும்பல் அரிவாள், உருட்டு கட்டையால் தாக்கி, பணத்துடன், இரண்டு பைக்குகளில் தப்பிச் சென்றது. வெப்படை போலீசார், அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X