பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானை தாலுகாவில் உழவு பணி

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 திருவாடானை தாலுகாவில் உழவு பணி

திருவாடானை:திருவாடானை தாலுகாவில் உழவு பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப விதைப்பு பணிகள் துவங்கி விடும்.ஆண்டு தோறும் உழவு டிராக்டருக்கு வாடகை, விவசாய பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதியூர் விவசாயி தம்பிராஜ் கூறியதாவது:ஆண்டுதோறும் விவசாயத்திற்கு செலவு செய்யப்படும் தொகை உயர்ந்து வருகிறதே தவிர நெல் விலை உயரவில்லை. உதாரணத்திற்கு கடந்தாண்டு ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு 600 ரூபாயாக இருந்தது. இந்தாண்டு 800 ரூபாயாக உயர்ந்தது.இதே போல் உரம், பூச்சி மருந்து விலை உயர்வும், களை எடுத்தல் போன்ற தொழிலாளர்களின் சம்பளம் உயர்வும் அதிகமாவதால் மிகவும் கவலையாக உள்ளது. வரும் ஆண்டில் நெல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X