சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுகை அருகே இரு தரப்பினர் மோதல் எஸ்.ஐ., துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. எஸ்.ஐ., துப்பாக்கி சூடு நடத்தி, கும்பலை விரட்டியடித்தார்.

புதுக்கோட்டை, கே.புதுப்பட்டி அருகே, போசம்பட்டியை சேர்ந்த பரமசிவம், 50, மற்றும் உடையப்பன், 48, ஆகியோர் இடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முன்விரோதம் இருந்தது. பரமசிவத்தின் ஆதரவாளர் திருநாவுக்கரசு, 46, உடையப்பன் பற்றி, அவதுாறாக, சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு, நேற்று முன்தினம் இரவு, இரு தரப்பினர் கோஷ்டி மோதலாக மாறியது.இதில், பரமசிவம் குடும்பத்தினர் உட்பட, ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, நேற்று காலை, மீண்டும் இரு தரப்பினரும், கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், இரு தரப்பை சேர்ந்த சிலர், காயம் அடைந்தனர். போலீசார் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு நடந்தது. பேச்சு, தோல்வி அடைந்ததால், எஸ்.ஐ., சரவணன் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, கூட்டத்தினர் கலைந்து ஓடினர். திருச்சி டி.ஐ.ஜி., ஆனிவிஜயா, எஸ்.பி., பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இரு தரப்பிலும், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டி.ஐ.ஜி., ஆனிவிஜயா கூறுகையில், ''போசம்பட்டியில் இரு தரப்பினர் மோதலை தவிர்க்க, எஸ்.ஐ., சரவணன், தற்காப்புக்காகவும், கூட்டத்தை கலைக்கவும், வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X