பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமரா: அரசு பதிலளிக்க ஆணையம் உத்தரவு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சாத்தான்குளம்
Police Station, CCTV, CCTV camera, Tamil Nadu, surveillance cameras, சிசிடிவி, சிசிடிவி கேமரா, போலீஸ் ஸ்டேஷன்

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஒரு நாளுக்கு பின் தானாகவே அழிந்து போகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி துாத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: காவல்நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.அவற்றில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202020:58:09 IST Report Abuse
r.thiyagarajan must be need cctv in all police stations and must be connected recording in centralized cloud tem with nate local backup.If any camera not working must be connected with alarm signal passed to head quarters. Then only chances of crime will be reduced
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
22-ஜூலை-202008:06:30 IST Report Abuse
ravi அரசு அலுவலகங்கள் எல்லாவற்றிலும் CCTV கமெராக்கள் நிச்சயமாக பொருத்தவேண்டும் என்ற ஆணையை அரசு உடனே அமல்படுத்தினால் என்ன. செய்யமாட்டார்கள். அதற்கும் அரசு ஊழியர்கள் வேறு ஒரு வழியை வைத்திருக்கிறார்கள். அல்லக்கைகளை வைத்து பங்க் கடைகளில் லஞ்சம் வசூலிப்பார்கள். திருந்தமாட்டானுங்க
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
22-ஜூலை-202007:46:03 IST Report Abuse
Darmavan காமெராவை இயங்காமல் செய்துவிட்டால் என்ன செய்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X