பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளுக்கு இலவச மரக்கன்றுகள்: தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஏற்பாடு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 ஊராட்சிகளுக்கு இலவச மரக்கன்றுகள்: தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஏற்பாடு

காளையார்கோவில்:காளையார்கோவிலில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் வளர்த்து, ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.மரங்களை வெட்டுவதன் மூலம் இயற்கை அன்னையின் கோபத்திற்கு ஆளானோம்.

அதன் விளைவு தான் சில ஆண்டாக மழையின்றி வறட்சி பிடியில் சிக்கியுள்ளோம். வறட்சி தான் மரம் நடுவதின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. தேசிய வேலை உறுதி திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப் படுகிறது. இதற்காக மாவட்டத்தில்அனைத்து ஊராட்சி ஒன்றியம் சார்பிலும் நாற்று பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கிராம ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாற்றங்கால் பண்ணையில் மரங்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.தேசிய வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் எஸ்.வெண்ணிலா கூறியதாவது:

இங்கு மா, பலா, வேம்பு, புளி, புங்கன், மயில் கொன்றை, மஞ்சள், சரக்கொன்றை, வேங்கை, மகாகனி என பலன் தரும் பழம், மூலிகை கன்றுகளின் விதைளை நட்டு, அவற்றை வளர்த்து, கிராம ஊராட்சிக்கு இலவசமாக தருகிறோம். இந்த ஆண்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வரை ஊராட்சிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X