பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில், 'கோவாக்சின்' சோதனை

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Covaxin, corona vaccine, covid19 vaccine, TamilNadu, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, trial, தமிழகம், கோவாக்சின், சோதனை

சென்னை : தமிழகத்தில், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து பரிசோதனை, சென்னையை அடுத்த, காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் துவங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதராபாதில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.மனிதர்களுக்கு மருந்தை அளித்து, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த மருந்து, ஆக., 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்காக, டில்லி, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இறுதி கட்ட பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் பரிசோதனை நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தன்னார்வலர்கள், 50 முதல், 100 பேருக்கு, மருந்தை செலுத்தி, பரிசோதனை செய்யப்பட உள்ளது.


latest tamil news


இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி, முதல்வர் சுந்தரம் கூறியதாவது: கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை துவங்குவதற்காக, தகுதியான தன்னார்வலர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டோம். பரிசோதனையில் பங்கேற்க, பல்வேறு நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் உடல் நலம் குறித்த, மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த பரிசோதனை முடிந்தபின், அவர்களது உடலில் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான விபரங்கள் அனைத்தையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
22-ஜூலை-202019:01:14 IST Report Abuse
Tamilnesan "தமிழகத்தில், 'கோவாக்சின்' சோதனை" என்கிற இந்த செய்தி விரைவில், "இந்தியாவில், 'கோவாக்சின்' சாதனை" என்கிற தலைப்பு செய்தியாக மாற வேண்டும். அதற்கு, பொது மக்கள் ஆதரவு நிச்சயம் தேவை. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-202009:53:03 IST Report Abuse
Girija மிக சரி கோடா நட்பு, ஈ பி எஸ் அரசு ஏன் இப்படி தடுமாறுகிறது? அரசு ஆஸ்பத்திரி இல்லையா? பாரத் பையோடெக்கிற்கு வேறு நல்ல மருத்துவமனை கிடைக்கவில்லையா? அல்லது தனியாரில் ஓரளவிற்கு இஸாபெல் போன்று ? வாக்சின் போட்டாலும் போடாவிட்டாலும் அந்த மருத்துவமனை ஒரு வழி பாதை ...
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜூலை-202008:21:09 IST Report Abuse
Chandramoulli உங்களுக்கு வேறு மருத்துவமனை எதுவும் கண்ணில் தெரியவில்லையா ???? ஊழலின் பிறப்பிடம் தான் இந்த நயவஞ்சக மருத்துவமனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X