பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா களப்பணியில் நல்லாசிரியர் ஆர்வம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 கொரோனா களப்பணியில் நல்லாசிரியர் ஆர்வம்

காரைக்குடி:காரைக்குடி தனியார் பள்ளி ஆசிரியர் சுந்தரராமன் 56. சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க துணை சேர்மன்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். 4 மாதங்களாக செஞ்சிலுவை சங்க ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ஐ.டி., நண்பர்கள் சங்கம், வகுப்பு நண்பர்கள் உட்பட பல்வேறு அமைப்பு சார்பாக, தனிமை முகாம் ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள், செவிலியர்கள், இசைக்கலைஞர்கள், முதியோர் இல்லங்கள் உட்பட பலருக்கு இலவசமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள், கபசுர பொடி, முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களையும், அவர் தம் உறவினர்களையும் தைரியப்படுத்துகிறார். மாவட்டம் முழுவதும் ரத்தம் தேவைப்படுவோர்க்கு 24 மணி நேரமும் ரத்தம் ஏற்பாடு செய்வது இவரது நிரந்தர பணி.

சுந்தரராமன் கூறும்போது, தான் கலந்து கொண்ட 'ஆசிரியர் மருத்துவர் கருத்தரங்கமே' இப்பணிகளை செய்வதற்கு முக்கிய காரணம் எனக்கூறும் இவர், அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும், இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டால் மனஆறுதல் கிடைப்பதுடன் புண்ணியத்தையும் சேர்க்க முடியும், என்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X