பொது செய்தி

தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பந்தய காளைகளுக்கு இஞ்சிசாறு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பந்தய காளைகளுக்கு இஞ்சிசாறு

கம்பம்:கம்பத்தில் பந்தய காளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சிசாறு வழங்கப்படுகிறது.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் ஒன்றாகும். கோயில் திருவிழாக்களை முன்னிட்டு அதிகம் நடக்கும்.

கம்பத்தில் ஆர்.ஆர்.வீரவிளையாட்டு கழக செயலராக உள்ள தவமணி 65, என்பவர் 48 ஆண்டாக இதில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை ஆயிரக்கணக்கான பந்தயங்களில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்துள்ளார். 6 காளைகள், 3 வண்டிகள் வைத்துள்ளார்.

கொரோனா காலங்களில் பந்தயக்காளைகளின் நிலை குறித்து அவர் கூறியதாவது: முயல்சிட்டு, பூஞ்சிட்டு,தேன்சிட்டு, கரிச்சான்,புள்ளிமான், நடுமாடு, பெரியமாடு போன்ற பல வரிசைகளில் பந்தயங்கள் நடக்கும். ஊரடங்கால்அவை 4 மாதங்களாக இல்லாததால் காளைகள் சோர்ந்து போயுள்ளன. எனவே தினமும் காலையில் ஒரு மணிநேரம் ரிலாக்சாக அழைத்து செல்வேன் அல்லது அவற்றின் மூலம் வெறும் நிலத்தில் உழவு செய்வேன்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி சாறு, சீரகம், வெள்ளைப்பூண்டு, பிரண்டை, மிளகாய்பொடி சேர்த்து இடித்து அவற்றை அப்படியே உருண்டையாக காளைகளுக்கு ஊட்டி வருகிறேன். இதன்மூலம் நெஞ்சு சளிவெளியேறி ஆரோக்யமாக உள்ளன. பந்தயங்களுக்காக பிள்ளைகள் போல காளைகளையும் பாதுகாப்பேன், 'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X