பொது செய்தி

இந்தியா

நாட்டுக்கு எதிராக பொருளாதார சதி; ஸ்வப்னா மீது என்ஐஏ அறிக்கை

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Kerala gold smuggling, Swapna Suresh, NIA, Swapna, Sandeep Nair, country's economy, smuggling gold, NIA, ஸ்வப்னா, என்ஐஏ

கொச்சி: 'கேரள தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்துள்ளனர்' என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தூதரகத்தில் முன்பு பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, என்.ஐ.ஏ., காவலில் எடுத்து விசாரிக்கிறது. அவர்களை, 24ம் தேதி வரை விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. அப்போது, வழக்கின் விசாரணை குறித்து, என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, தங்கக் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும், அதில் கிடைத்த பணத்தை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்துள்ளனர்.யு.ஏ.இ., தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த நாட்டுடனான நம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில், நாட்டின் நலனுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202004:03:50 IST Report Abuse
J.V. Iyer சொப்னா என்பது ஒரு கருவி தான். இவளுக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்கலாம். அவர்களை பிடிக்கவேண்டும், அடியோடு களையவேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-202022:10:33 IST Report Abuse
Tamilan ஏற்கனவே நடப்பது சதிதான் . ஒருவேளை இப்போது நடப்பது ஏற்கனவே கொள்ளையடித்து செழித்துள்ள இந்தியர்கள்தங்கள் ஆதரவு அந்நியர்களுடன், மற்ற இந்தியர்களுக்கு எதிராக சதி செயகிறார்கள் . இவர்கள் அந்நியர்களுக்கு ஆதரவாக புதிதாக ஒரு கும்பலை, இந்தியாவில், இந்தியாவில் ஏற்கனவே உள்ள பெரும் கும்பலுக்கு எதிராக உருவாக்குகிறார்களா ?. அல்லது அவர்களுடன் இணைந்து மேலும் மேலும் பல இந்தியர்களின் பொருளாதாரத்தை அபகரிக்க போகிறார்களா ?.
Rate this:
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202020:23:28 IST Report Abuse
Ram இவள் மதம் மாறி பல வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஏன் ஸ்வப்னா சுரேஷ்? இனிமேல் இவள் இப்போதைய பேரை குறிப்பிடவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X