சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு அதிகரித்தும் அலட்சியத்தில் கூடலுார் மக்கள்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பயமின்றி முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியில் செல்கின்றனர்.

இங்கு ஜூனில் துவங்கி நேற்று வரை 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலுாரில் இருவரும், லோயர்கேம்பில் ஒருவரும் பலியாகியுள்ளனர். விழிப்புணர்வு இல்லைஇந்நகராட்சியில் ஜூலை 26 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வது, கூட்டமாக பேசுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கடைகளில் பொருட்கள் வாங்குவது தொடர்கிறது.

அபராதம்

நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, 'விதிமுறை மீறி கடைகளில் விற்பனை செய்பவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.33,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கிறோம்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X