சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொருட்கள் முறையாக வழங்க கோரி மகளிர் ரேஷன் கடையை முற்றுகை

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

பெண்ணாடம்; பெண்ணாடம் மகளிர் ரேஷன் கடையில் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வலியுறுத்தி, விற்பனையாளரை மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம், தெற்கு ரதவீதியில் மகளிர் ரேஷன் கடை (எண் - 2) உள்ளது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.விற்பனையாளராக ஆசைத்தம்பி உள்ளார். இந்நிலையில், நேற்று பகல் 1:00 மணியளவில் ரேஷன் பொருட்கள் வாங்க ஏராளமானோர் வந்தனர். அப்போது, இலவச அரிசிக்கான கூப்பன் மற்றும் மாதந் தோறும் வழங்கப்படும் அரிசியை முறையாக வழங்கவில்லை எனக்கூறி, விற்பனையாளர் ஆசைத்தம்பியை முற்றுகையிட்டு, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர், ரேஷன் பொருளை முறையாக வழங்குவதாக கூறியதால், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X