காங்., கட்சியிலிருந்து இளைஞர்கள் ஓட்டம் ஏன்?

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
Congress, Sachin Pilot, Jyotiraditya Scindia, Pilot, Scindia, cong, politics, bjp, young leaders, காங்கிரஸ்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியில், 40 வயதையொட்டிய இளைஞர்கள், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கு படையெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசை கை கழுவி, பா.ஜ., வில் இணைந்தார். தற்போது, ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்.

இளைஞர்கள் காங்கிரசிலிருந்து விலகிச் செல்வது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள், அந்தந்த மாநிலங்களில் இளைஞர்களுக்கு வழி விடுவது இல்லை. எவ்வளவு வயதானாலும், தாங்களும், தங்களது ஆதரவாளர்களுமே, முக்கிய பதவிகளில் கோலோச்ச வேண்டும் என நினைக்கின்றனர். அடுத்த லோக்சபா தேர்தல் நடப்பதற்கு, இன்னும், நான்கு ஆண்டுகள் உள்ளன. அதனால், இப்போதைக்கு, பா.ஜ.,வை அசைக்க முடியாது.


latest tamil newsகாங்கிரசாலும், தேசிய அளவில் இழந்த செல்வாக்கை மீட்பதற்கு, இப்போதைக்கு வாய்ப்பில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சி நிலைக்குமா என்ற நிச்சயம் இல்லை. மற்ற மாநிலங்களில், பெரும்பாலும், பா.ஜ., வே ஆளும் கட்சியாக உள்ளது. அடுத்ததாக, சில மாநிலங்களில் குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, காங்கிரசில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது இல்லை என்ற பேச்சும் உள்ளது.

இதனால், அதிருப்தியில் உள்ள அந்த சமூகத்தினரின் ஆதரவை பெறும் வகையில், காங்கிரசில் உள்ள அந்த சமூக நிர்வாகிகளை, பா.ஜ., தலைவர்கள், தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். இதனால் தான், காங்கிரசில் உள்ள இளைஞர்கள், பா.ஜ., பக்கம் தாவுகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
23-ஜூலை-202017:08:26 IST Report Abuse
Tamilnesan நேரு குடும்பத்தை இந்தியாவை விட்டு வெளியேற்றினால் மட்டுமே காங்கிரஸுக்கு எதிர்காலம்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
28-ஜூலை-202007:57:39 IST Report Abuse
Sathya Dhara WRONG. KHAN CROSS FAMILY SHOULD GET OUT FROM THIS HOLY SOIL BHARAT. LET US ALL JOIN TO ACHIEVE THIS. MEDIAS WHO ARE SUPPORTING THESE NATIONAL TRAITORS ..SHOULD BE BOYCOTTED....
Rate this:
Cancel
22-ஜூலை-202015:47:19 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) முதியவர்கள் இளையவர்களை வளர விட மாட்டார்கள் வெறுத்து போய் வெளியேறுகிறார்கள்
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
22-ஜூலை-202014:45:04 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இளையவரா இருப்பது முக்கியமில்லை, துரோகியாக இல்லாமல் இருப்பதுதான் முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X