அமைப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த குழுக்கள்...கணக்கெடுப்பு பணியில் 2,500 பணியாளர்கள்| Dinamalar

தமிழ்நாடு

அமைப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த குழுக்கள்...கணக்கெடுப்பு பணியில் 2,500 பணியாளர்கள்

Added : ஜூலை 22, 2020
Share
 அமைப்பு:  கொரோனா பரவலை கட்டுப்படுத்த குழுக்கள்...கணக்கெடுப்பு பணியில் 2,500 பணியாளர்கள்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில், ஊரக மற்றும் நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.கண்காணிப்பு அலுவலர்முதற்கட்டமாக, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடுகள் தோறும் விபரங்களை பெறும் பணியில், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், முதல் நிலை கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.வீடுகளில் விபரங்கள் சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 2,500 களப்பணியாளர்கள், நேற்று 21ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு ஈடுபட உள்ளனர்.இவர்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து அளிப்பார்கள்.வீடுகளில் விவரம் சேகரிக்கும் பணியின் போது கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு குழுவினரால் கடந்த 18ம் தேதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அளவில் நடந்த கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அறிகுறிகள், இணை நோய் உள்ள நபர்கள் குறித்து குடும்ப வாரியாக தினசரி சேகரிக்கும் விவரங்களை ஊராட்சி அளவில் தயாரித்து, அன்றைய தினமே ஊரக பகுதிகளில் ஊராட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு அமைத்துள்ள ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.சிறப்பு முகாம்கள்நகரங்களில் சுகாதார மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

வட்டார அளவிலான குழு மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான குழு பெறப்பட்ட அறிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.உடனடி சிகிச்சைமுகாமில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் வருவோருக்கு அங்கேயே பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் பயத்தை தவிர்த்து நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X