வெளிநாட்டில் தவிக்கும் தாய்மீட்கக்கோரி பிள்ளைகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் தவிக்கும் தாய்மீட்கக்கோரி பிள்ளைகள் மனு

Added : ஜூலை 22, 2020
Share

கள்ளக்குறிச்சி; குவைத்தில் தவிக்கும் தாயை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது பிள்ளைகள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.இது குறித்து, குவைத்தில் தவிக்கும் பார்வதி என்பவரின் பிள்ளைகள் அளித்த மனு:எங்களது பெற்றோருக்கு, இரண்டு பெண், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளோம். கூலித் தொழில் செய்து வரும் எங்கள் பெற்றோர், போதிய வருமானமின்றி குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டனர். வறுமை காரணமாக எங்களது தாய் பார்வதியிடம் ஆசைவார்த்தை கூறி, கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரத்தைச் சேர்ந்த ஏஜன்ட்டுகள் இருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் குவைத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு எங்களது தாய் பார்வதி சரியான உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதியின்றி உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பான கொடுமைகள் குறித்து எங்களது தாய், எங்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு அழுகிறார்.வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜன்ட்டை தொடர்பு கொண்டு கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால், நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே, வெளிநாட்டில் இருக்கும் எங்களது தாயை மீட்டு இந்தியா வரவழைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X